தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி மாதவ ராமானுஜம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்பாக குற்றவாளியான நபருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர், ஜாபர் சாதிக் ஆஜராக உத்தரவு
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் லெட்சுமி, பெண் காவலர் முருகலட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்