தேனி: போடிநாயக்கனூர் ரேஷன் கடை அருகில் உள்ள தெருவில் வார்டு கவுன்சிலர் நடத்திய ஆய்வில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தகவலந்து வந்த உணவு வழங்கல் துறை பறக்கும் படை தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர்கள் ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றி பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
இங்கு கடை எண் 22, கடை எண் 5, கடை எண் 4 ஆகிய மூன்று ரேஷன் கடையில் இயங்கி வருகிறது. ஒரு இடத்தில் மூன்று ரேஷன் கடைகள் இயங்கி வருவதால் இப்பகுதியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் நாள்தோறும் அரிசி, கோதுமை, பச்சரிசி, பாமாயில், துவரம் பருப்பு, சீனி போன்ற ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை அருகில் அமைந்துள்ளது ராஜ விநாயகர் திருக்கோவில் அந்த பகுதியில் 20வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவர் இடிந்து விழுந்த சாக்கடையை ஆய்வு செய்ததற்கு சென்றுள்ளார். அங்கு ராஜ விநாயகர் கோயிலின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி அருகே சுமார் 25க்கும் மேற்பட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே பிளாஸ்டிக் கொண்டு போர்த்தியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதை அப்புறப்படுத்தி பார்த்தபொழுது அவைகள் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்துள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ! பள்ளி முதல்வரும் கைதானது ஏன்?
உடனடியாக உணவு வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு வெங்கடேசன் தகவல் கூறிய நிலையில். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறக்கும் படை துணை வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் வருவாய் அலுவலர் சுரேந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தபோது, அவை ரேஷன் அரிசி என்பதும், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
அப்பகுதியில் யார் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பார் என்று விசாரித்தபோது, யாரும் சரிவர பதில் கூறாத நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்றரை டன் மதிப்புள்ள 29 மூடை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, உடனடியாக லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்டு போடிநாயக்கனூர் மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவு வழங்கல் துறை குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
ஏற்கனவே ஒரே இடத்தில் மூன்று ரேஷன் கடைகள் அமைந்துள்ள நிலையில், இப்பகுதியில் ரேஷன் அரிசி வாங்கும் இடைத்தரர்கள் அதிகளவில் சுற்றித் திரிவதாகவும், ரேஷன் அரிசி வாங்க வரும் நபர்களிடமும் ரேஷன் கடைகளிலும் இவர்கள் அரிசியை விலைக்கு பெற்று அதிக விலைக்கு கேரளாவிற்கு மற்றும் பிற இடங்களுக்கு விற்று வருவதாகவும் பல்வேறு தகவல்கள் அலுவலர்களுக்குக் கிடைத்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.