ETV Bharat / state

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்.. - ilayaraja daughter passed away

Ilayaraja Daughter death: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ilayaraja-daughter-bhavatharini-passed-away
இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 8:59 PM IST

Updated : Jan 26, 2024, 2:33 PM IST

சென்னை: இசை அமைப்பாளர் மகளும் சினிமா பின்னணி பாடகியுமாக ஏராளமான படங்களில் பாடல் பாடியுள்ளவர் பவதாரிணி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் குறைவு காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5.20 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

இளையராஜாவின் மகளான பவதாரிணி ஒரு சிறந்த பின்னணி பாடகியாவர். இவருடைய சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என அனைவருமே இசைத் துறையில் தான் உள்ளனர்.

தன்னுடைய வாழ்நாளில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் அதிக அளவில் பாடியுள்ளார். இவர் பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒன்னு' பாடலுக்குச் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

இவர் நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் ரேவதி இயக்கிய 'பிர் மிலேங்கே' படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் பெற்றவர்.

சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி ஆவார். அழகி படத்தில் இவர் பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடல் ஹிட்டான பாடல் ஆகும். மேலும், இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது. அதில், குறிப்பிடும்படியான உல்லாசம் படத்தில் 'முத்தே முத்தம்மா', தனுஷ் நடித்த அனேகன் படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாடலும் ஆகும்.

இந்நிலையில், பவதாரிணியின் மறைவு திரையுலகினரை மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையிலுள்ள அவரது உடல் நாளைய தினம் சென்னை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ விவகாரம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் கைது..

Last Updated : Jan 26, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.