ETV Bharat / state

சென்னை ஐஐடியில் முழு கல்வித் தொகைக்கும் விலக்கு.. என்னென்ன தகுதிகள்? யார் விண்ணப்பிக்கலாம்? - scholarships in iit madras

Scholarships for IIT Madras students: சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இனி நிதி ஒரு பிரச்னை இல்லை என்றும், எந்த மறுப்பும் இன்றி தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகையும் வழங்க தாங்கள் தயார் என்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் டீன், பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறியுள்ளார்.

முழு கல்வித்தொகையும் வழங்கப்படும்
சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இனி நிதிச் சுமை பற்றிய கவலை வேண்டாம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 3:51 PM IST

சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இனி நிதிச் சுமை பற்றிய கவலை வேண்டாம்

சென்னை: சென்னை ஐஐடியில் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதுடன், பெற்றோரின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்கள் இணைந்து, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு (2022-2023) 100 சதவீத நிதியுதவியை வழங்கினர். அதேபோல், இந்த ஆண்டும் (2023-2024) நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

சென்னை ஐஐடி மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அளித்துவரும் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் ஒன்று 'மெரிட்-கம்-மீன்ஸ்' (MCM) உதவித் தொகை. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தாலும், அவர்களது பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவின் கீழ், இந்திய அரசு அளித்து வரும் மூன்றில் இரு பங்கு கல்விக் கட்டண தள்ளுபடியுடன், எம்சிஎம் கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள பிடெக், இரட்டைப் பட்ட மாணவர்கள் (டபுள் டிகிரி) கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆதரவின் மூலம், மாணவர்கள் தங்களின் பண பிரச்னை, கல்விக் கடன்கள் பற்றிய கவலையின்றி, படிப்பிலும், எதிர்காலக் கல்வியைத் தொடர்வதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்ற வரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு 3.26 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-2024இல் 495 மாணவர்களுக்கு 3.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையான 66 ஆயிரத்து 667 ரூபாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் வழங்கப்படுகிறது” என கூறினார்.

தொடர்ந்து இது குறித்து சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா பேசுகையில், “நிதித் தேவையுள்ள மாணவர்களுக்கு எந்த மறுப்பும் இன்றி தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகை வழங்கப்பட்டது” என கூறினார்.

இந்த கல்வி உதவித்தொகையால் பயனடைந்த மாணவர்கள் கூறும்போது, “எனது குடும்பத்தில் முறையாக பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான் என்பதால் என் குடும்பம் பெருமையடைந்துள்ளது. எனது குடும்பத்திற்கு எந்தவித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த ஐஐடிஎம்-இன் கல்வி உதவித் தொகைகள் உதவுகின்றன” என கூறினர்.

இது குறித்து ஐஐடி மாணவி சாய்ஸ்ரீ கூறும்போது, “சென்னை ஐஐடியில் என்னை சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்கு பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது, சென்னை ஐஐடியைச் சுற்றிப் பார்த்த அவர், இது மிகவும் மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனம் என்பதை புரிந்துகொண்டார். எனவே, என்னை இங்கே படிக்க வைப்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே சென்னை ஐஐடியில் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது.

பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்ற விவரங்களை சென்னை ஐஐடி இணையதளத்தில் பார்வையிட்டபோது, முன்னாள் மாணவர்களின் கல்வி உதவித்தொகை வாயிலாக, ஏசிஆர் அலுவலகம் கட்டண விலக்கை பெற்றுத் தருவது தெரிய வந்தது. இங்கு நான் சேர்ந்தபின், இமெயில் மூலம் கல்வி உதவித்தொகை குறித்து எனக்கு தகவல் வந்தது. நிதிச்சுமை நீங்கிவிட்டதால் எனது படிப்பு, இலக்கு, கனவு ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவும், கவனம் செலுத்தவும் முடிகிறது. அத்துடன், என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் குறித்தும் சிந்திக்க முடிகிறது” என்றார்.

சென்னை ஐஐடியில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஃபெலோஷிப் வடிவில் வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவரவர் கல்வித்திறன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களின் நிதியுதவித் தொகை கிடைக்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத் தள்ளுபடியும் உண்டு.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள், எம்.ஏ. பாடத் திட்டத்தில் சேரும்போது, அவர்களுக்கு இலவச மெஸ் வசதி, மாதம் ரூ.250 பாக்கெட் அலவன்ஸ், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கான வாடகை ஆகியவற்றை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ள எம்.ஏ. பாடத்திட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு, தகுதி கல்வி உதவித்தொகையும் (Merit Scholarship) வழங்கப்பட்டது.

சென்னை ஐஐடி பிடெக் பாடத் திட்டத்தில் சிறந்த மாணவர்களுக்கு NCERT, மத்திய-மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மிக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது.

பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) மூலம், எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவியாளர்கள் (HTTA) என்ற முறையில், மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தகுதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

பொறியியல் முழுநேர பிஎச்.டி ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படும் கல்வியாளர்களுக்கு பகுதிநேர கற்பித்தல், ஆராய்ச்சி உதவியாளர்கள் (HTRA) என்ற முறையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.37,000 வீதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42,000 வீதமும் அனுமதிக்கப்படுகிறது.

ஆராய்ச்சி அறிஞர்கள் சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க நிதியுதவி வழங்கி, இந்த கல்வி நிறுவனம் ஊக்குவிக்கிறது. எம்.எஸ், பிஎச்டி கல்வியாளர்களுக்கு, பதிவுக் கட்டணம் உள்பட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் உச்ச வரம்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டிய ஆசிரியர்கள்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.