ETV Bharat / state

நுங்கு சாப்பிடுவது எப்படி? மதுரையில் ஜில் செய்த நுங்கு வண்டி பந்தயம்! - Ice apple eating training - ICE APPLE EATING TRAINING

Ice apple eating training: மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற நுங்கு சாப்பிடும் பயிற்சி மற்றும் நுங்கு வண்டி போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

நுங்கு வண்டி போட்டியில் பங்கேற்றவர்கள்
நுங்கு வண்டி போட்டியில் பங்கேற்றவர்கள் (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 8:20 PM IST

மதுரை: மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில், காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் நுங்கு வண்டி பந்தயம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, போட்டியில் பங்கேற்க வந்த அனைவருக்கும் நுங்கை சாப்பிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நுங்கு வண்டி போட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயத்தில் 6 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இது குறித்து போட்டியில் பங்கேற்ற ஷெசாந்த் என்ற சிறுவன் கூறுகையில், "நம் உடலுக்கு ஏற்ற சிறப்பான உணவு நுங்கு. ஆனால், என் வயதில் உள்ள சிறுவர்கள் அதனை சாப்பிடுவதில்லை. அதேபோல், இங்கு நடத்தப்பட்ட நுங்கு வண்டி பந்தயமும் மிகச் சிறப்பாக இருந்தது" எனக் கூறினார்.

அதன் பின்னர் பேசிய ஜெயந்தி மீனா என்பவர், "இங்கு நடைபெறுகின்ற நுங்கு வண்டி பந்தயம் குறித்த தகவலை சமூக வலைத்தளம் மூலம் அறிந்தேன். உடனே எனது இரண்டு பெண் குழந்தைகளின் பெயர்களையும் பதிவு செய்தேன். நகர்ப்புற வாழ்வியல் மிகுந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளுக்கு இதுபோன்ற விளையாட்டுகள் குறித்து அறிவதற்கு வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க: உதகையில் களைகட்டிய படகு போட்டி!

எனது பிள்ளைகள் அவர்களாகவே கையில் நுங்கு எடுத்து சாப்பிட்டது கிடையாது. இங்குதான் முதல் முறை அதற்குரிய பயிற்சி பெற்றனர். மேலும், இங்கு நடைபெற்ற போட்டிகள் போன்று ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆண்டிற்கு ஒரு முறையோ நடத்தினால், குழந்தைகள் செல்போனில் நேரத்தை செலவு செய்வதை குறைத்துக் கொள்வார்கள். அவர்களது உடலுக்கும் ஆரோக்கியமாக அமையும்" என்று கூறினார்.

மேலும், இது குறித்து நுங்கு வண்டி போட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னவயல் காளிமுத்து கூறுகையில், "சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இந்த நுங்கு வண்டி பந்தயம். விளையாட்டுப் பொருட்களை அவர்களை தயாரிக்கச் செய்வது இந்த விளையாட்டு போட்டிதான். உணவாக பயன்படக்கூடிய பொருளின் கழிவு, விளையாட்டுப் பொருளாக மாறுவது தான் இதன் தனிச்சிறப்பு. இதனை நமது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் கருத்து கணிப்பு முடிவு என்றால் என்ன? அதனை எவ்வாறு அறிவது.. முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.