ETV Bharat / state

மதுரை பள்ளி மாணவன் கடத்தல்; ஐஏஎஸ் அதிகாரி மனைவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை கடிதம் வெளியானது! - madurai sch boy kidnap case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 8:29 PM IST

Updated : Jul 22, 2024, 9:05 PM IST

School Student Kidnapped Case: மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா இறப்பிற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்தாக கூறப்படுகிறது. தற்போது அந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சூர்யா
தற்கொலை செய்து கொண்ட சூர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் இறப்பிற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்தாக கூறப்படுகிறது. தற்போது அந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவின் தாயார் பேட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

அதில், "எனது பெயர் சூர்யா. மதுரையில் கடந்த 11 ஆம் தேதி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கும், அந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இவ்வழக்கில் சம்பந்தப்படுத்தினார் ராஜலட்சுமி என புரியவில்லை.

News-ல் பார்த்தேன். அவரது கணவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளதால் நான் பணம் கேட்டேன் என பச்சை பொய் புகார் கொடுத்துள்ளார். அவரது கணவர் பெயர்கூட எனக்கு தெரியாது. கடந்த ஆண்டு ஐகோர்ட் மகாராஜன், ராஜலட்சுமியிடம் மிகவும் நெருங்கி பழகியவர். அவர் மூலமாகத்தான் எனக்கு ராஜலட்சுமியை தெரியும். அவர் வீட்டிற்கு தான் ராஜலட்சுமி அடிக்கடி வருவார். அவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர்.

இருவரும் நெருங்கி பழகிய நேரத்தில் ஒன்றாக இணைந்து காளவாசல், ஹெரிடேஜ் ஹோட்டல் மற்றும் ராஜா வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். கடந்த ஆண்டு ராஜா பெயரில் வழக்குகள் உள்ளன என்று எனக்கு தெரிய வந்ததும் அவர்கள் ஊரைவிட்டு சென்றார்கள்.

சிறிது காலம் கழித்து ராஜலட்சுமி, ஐகோர்ட் மகாராஜன் ரூ.60 லட்சம் என்னிடம் கடன் வாங்கியதாக சொன்னார். அது எனக்கு தெரியாது என நான் கூறினேன். அதற்கு ராஜலட்சுமி எனக்கு தெரியாது; மகாராஜன் ஓடிவிட்டார். நீ தான் எனக்கு பணம் தர வேண்டும். இதுகுறித்து எனது கணவரிடம் சொல்வேன் என டார்ச்சர் செய்தார்.

நான் பயந்து கொண்டு கணவரிடம் கூறவேண்டாம் என கூறி பணத்தை நான் தருகிறேன் என ஒப்புக்கொண்டேன். அதன் பின்பு சிறிது காலம் கழித்து எனக்கு பணம் தேவைப்பட்டதால் ராஜலட்சுமியிடம் பணம் கேட்டேன். அதற்கு அவர் உனக்கு சொந்தமான பைபாஸ் சாலையில் உள்ள காம்ப்ளக்ஸை அடமான கடனாக வைத்து பணம் தருகிறேன் என கூறி ரூ.15 லட்சம் கடனாக ராஜலட்சுமியிடம் வாங்கினேன். அதற்கு வட்டி எடுத்துக்கொண்டு தான் பணத்தை கொடுத்தார் (detail my bank account Feb 2024) மறுபடியும் எனது வாழ்வில் சறுக்கல் இல்லாத சம்பவத்திற்கு என்னை இழுத்தார்கள்.

ஒருவர் (ஐ-கோர்ட் மகாராஜன்) ஜெயிலில் இருந்து தப்பியதால் அவரிடம் நான் பழகிய பாவத்திற்கு என்னை எல்லாவற்றிலும் எனது பெயரை இழுத்தார்கள். அவர் தப்பித்த சம்பவத்தன்று நான் அந்த ஊரிலே இல்லை. ஆனால், எனது பெயர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, ராஜலட்சுமி என்னிடம் மகாராஜன் வாங்கிய ரூ. 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய ரூ.15 லட்சத்திற்கும் பணம் கேட்டு டார்ச்சர் செய்தார்.

நான் எனது காம்ப்ளக்ஸை எழுதி தருகிறேன் என கடந்த ஏப்ரல் மாதம் கூறி பதிந்து கொடுத்தேன். அதுவும் அவருக்கு போதவில்லை. மகாராஜன் பெற்ற கடன் ஒரு வருட வட்டியுடன் வேண்டுமென தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தார். ராஜலட்சுமி கைப்பட எழுதிய வட்டி நோட் என்னிடம் உள்ளது. பணம் கேட்டு டார்ச்சர் செய்ததுடன் மட்டுமல்லாமல் ராஜலட்சுமி தன்னுடைய மாமன் மகன் என ஒருவரை அழைத்து வந்தார். அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

எனக்கு கணவரும் குடும்பத்தினரும் ஆதரவில்லை என தெரிந்து கொண்ட அவர்கள் ரூ.60+15 லட்சம் பணத்திற்கு 1.35 கோடியை வட்டியும், முதலுமாக தர வேண்டும் என டார்ச்சர் செய்தது மட்டுமல்லாமல் நான் எழுதிக் கொடுத்த காம்ப்ளக்ஸ் வெறும் ரூ.80 லட்சம் தான் போகும் மீதம் பணத்தை கொடுத்தாக வேண்டும் என தொடர்ச்சியாக ஏமாற்றினார்கள். நான் அவர்களிடம் இது என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது.

யாரோ வாங்கிய கடனுக்கு ஏற்கனவே விளாத்திகுளத்தில் இருந்த சொத்தை ரூ.20 லட்சத்திற்கு அடமானம் வைத்து அந்த சொத்தையும் இழந்துவிட்டேன் என ராஜலட்சுமி மற்றும் அவர் அழைத்து வந்த மாமன் மகனிடமும் அழுதேன். அதற்கும் அவர்கள் மனம் மாறவில்லை.

எனது சித்தப்பாவிடம் நடந்ததை கூறினேன். அதற்கு அவர் வேறு ஒருவருக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதில் அவர்களது கடனை அடைத்து விடலாம் என்று கூறினார். அதை வைத்து இந்த இடத்தை வேறு ஒருவர் நல்ல லாபத்திற்கு வாங்கினால் எனக்கு தருவீர்களா என அடமான பத்திரத்தை கேட்டேன். அதற்கு மைதிலி ராஜலட்சுமி 1.35 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பியூட்டி பார்லரை எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

இது பகல் கொள்ளை என்று கூறினேன். ராஜாவிடம் பழகிய பழக்கத்தினால் குடும்பம் மரியாதை போனது. கணவரும் பிரிந்தார். நான் ராஜலட்சுமி இடம் எனது பியூட்டி பார்லரை எனக்கு திருப்பித் தாருங்கள் எனக்கு சோறு போட யாரும் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அதுதான் என்று கேட்டிருந்தேன். இந்த பார்லரை வைத்தும், என்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றுவதற்காக எனது பெயரை சிறுவன் கடத்தல் வழக்கில் ராஜலட்சுமி சேர்த்தார்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் முகம் கூட எனக்கு தெரியாது, பெயர் தெரியாது. வேண்டுமென்றால் என்னுடைய செல்ஃபோன் உரையாடலை சோதித்துப் பாருங்கள். நான் எப்படி ரவுடியிடம் பழகி இருக்க முடியும்? இதில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் நீங்கள் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பணம் தராமல் ஏமாற்றுவதற்கு செத்துப்போன மைதிலி ராஜலட்சுமி புருஷனுடன் என்னை தொடர்புபடுத்தி சொல்லி இருக்காங்க. அதுகுறித்து அவரிடம் கேட்க முடியாது.? ஏனென்றால் அவர் இறந்து போனார். அதுபோல ஹைகோர்ட் மகாராஜன் ஜெயிலை விட்டு ஓடிப் போன பிறகு ராஜலட்சுமி இடம் தொடர்பில் இருந்தார்.

ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை அவர் வீட்டிற்கு அடிக்கடி மகாராஜன் வந்தார். அது குறித்து சிசிடிவியை ஆய்வு பண்ணினால் உண்மை தெரியும். ராஜலட்சுமி கணவருக்கும், எனக்கும் தொடர்பு இருந்தால் ஒருமுறை கூடவா எனது செல்போனில் அவர் பேசியிருக்க மாட்டார்? கடந்த வருடம் எனது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து பாருங்கள்.

குழந்தை கடத்தல் எவ்வளவு பெரிய குற்றம் என்று எனக்கு தெரியும். இரண்டு குழந்தைகள் எனக்கும் இருக்கு. குழந்தையை பிரிந்து வாழும் வலி எனக்கு தெரியும். இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டேன். பெங்களூரு சென்று சமையல் கலைஞராக வேண்டும் என நினைத்து படிக்க சென்று கையில் வைத்த பணத்தை வைத்து பீஸ் கட்டினேன்.

நான் குழந்தை கடத்தல் செய்ததற்கு ஆதாரம் வேண்டும். இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது. நாளை நான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் எனது மானம் எனது கணவர் மானம் பெயர் திரும்ப கிடைக்குமா? என்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா..? நீதி வேண்டும்.

முதலமைச்சர் உங்கள் ஆட்சியை நான் பார்த்து வருகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஆனால் என்னை என்றாவது ஒருநாள் நிரபராதி என்று மேடையில் நீங்கள் மற்றும் உதயநிதி பிரதர் சொல்லுங்கள்.

எனது ஆத்மா உங்களை வாழ்த்தும். எனது கணவர் ரொம்ப நல்லவர். அவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். எனது குழந்தையிடம் உனது தாய் கொஞ்சம் நல்லவள் என்று கூறுங்கள். உங்களை நம்பித்தான் நான் போகிறேன்" என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி; என்ன காரணம்? - SENTHIL BALAJI CASE

Last Updated : Jul 22, 2024, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.