ETV Bharat / state

"என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்" - விசிக திருமாவளவன்! - சிதம்பரம் தொகுதி

VCK Thirumavalavan: திமுக கூட்டணி மக்களின் நல் ஆதரவைப் பெற்று வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெரும் என நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்
அரியலூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 6:42 PM IST

Updated : Feb 27, 2024, 7:32 PM IST

"என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்" - விசிக திருமாவளவன்!

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், அதன் குழுத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அவரவர்களின் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத இல்லை எனச் சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை உள்ளது. திமுக கூட்டணி மக்களின் நல் ஆதரவைப் பெற்று வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெரும் என நம்புகிறேன். திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். இதில், 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளோம். விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம். சுமூகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். நான்கு தொகுதிகளைக் கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொதுத் தொகுதி.

ஆனால் எட்டுக் கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். பாஜகவை விட்டு அதிமுக தனியாகப் பிரிந்து வந்தாலும் பாஜக அதிமுகவை விடுவதாக இல்லை. அதிமுகவை மூன்றாம் நிலைக்குத் தள்ளி அதனைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்து வந்துள்ளேன்" என்றார்.

தொடர்ந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "இது என்னுடைய சொந்தத் தொகுதி. இங்கு தான் நிற்பேன். உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். இந்தத் தொகுதியில் தான் போட்டியிட முடியும்" எனக் கூறினார்.

மேலும், தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் மூன்று தொகுதிகளிலும், ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குக் கட்சியினர் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் மற்ற மாநிலங்களில் இந்தியக் கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருகிறோம்" என அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஹனுமா விஹாரி; ஆந்திர அரசியலில் நுழைந்த கிரிக்கெட் விவகாரம்.. சந்திரபாபு நாயுடு கண்டனம்!

Last Updated : Feb 27, 2024, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.