ETV Bharat / state

தூத்துக்குடி; பதுக்கி வைத்திருந்த 8 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருட்கள் பறிமுதல்..கணவன் மனைவி கைது.. - ice drugs seizure

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 11:28 AM IST

ice drugs seizure: தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 8 கிலோ ஐஸ் போதைப்பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம்
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் வழியாக சமீப காலமாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, ஐஸ் போதை பொருள், ஹெராயின், பீடி இலை பண்டல்கள், வெள்ளி கொலுசுகள், உரம் மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கு மத்திய, மாநில உளவுத்துறை, இந்திய கடலோர காவல் படை, மரைன் போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கடல் பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் ரவிக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள இனிகோ நகரில் உள்ள வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் 8 கிலோ மெத்த பெட்டமைன் கிரிஸ்டல் (ஐஸ் போதைப்பொருள்) இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ஐஸ் போதைப்பொருளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் வீட்டில் இருந்த நிர்மல் ராஜ் மற்றும் அவரது மனைவி சிவானி ஆகிய இருவரையும் கைது செய்து தூத்துக்குடி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்த இருவரிடம் ஐஸ் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எனவும் ஐஸ் போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்றும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 8 கிலோ ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும் எனவும் இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் படுஜோர்: கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.