ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள் தீட்சிதர்களால் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் தாக்கல்! - CHIDAMBARAM NATARAJA TEMPLE

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களை இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்  Thillai Natarajar Temple land issue  Chidambaram  Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 6:53 AM IST

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (அக்.24) நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசம் இல்லை என்றும், எந்த நிலத்தையும் தீட்சிதர்கள் விற்கவில்லை என்றும், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது" என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கோயில் நிலங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும், நகைகள் அனைத்துக்கும் கணக்கு உள்ளது எனவும், ஒரு நகை கூட காணாமல் போகவில்லை. கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை கோயில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மகளிர் சிறைகளில் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

பின்னர், அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், "கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையடுத்து, அறநிலையத் துறை தரப்பு அறிக்கைக்கு பதிலளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.