ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி - water flow Increase in Hogenakkal

Hogenakkal Cauvery River: தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று ஒரே நாளில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Hogenakkal Cauvery river water Flow increased

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 10:50 AM IST

Updated : Mar 13, 2024, 11:10 AM IST

Flow of water in Okanagan Cauvery river

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடி முதல் 200 கன அடி என மிகவும் குறைந்திருந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆறு ஆங்காங்கு சிறு சிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், குட்டைகளாக காட்சியளித்தன.

கர்நாடக மாநில பகுதிகளில் நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக, தண்ணீர் இன்றி வறண்ட காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்த அதிகரித்து வரும் நீர்வரத்தால், ஒகேனக்கல் உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டாலோ அல்லது கர்நாடக பகுதிகளில் மழை பெய்தாலோ நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வழக்கமான ஒன்று.

இந்த நிலையில், இன்று திடீரென இன்று (மார்ச் 13) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த திடீர் நீர்வரத்தால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என மத்திய நீர் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: இன்டர்போல் உதவியை நாடிய தமிழ்நாடு காவல்துறை

Last Updated : Mar 13, 2024, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.