ETV Bharat / state

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு! - Road Blocked Protest In Dindigul - ROAD BLOCKED PROTEST IN DINDIGUL

Hill Villagers Protest In Dindigul: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கோரி 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 5:23 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரந்த மலை பகுதியில் பெரிய மலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை என 4 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் வசித்து வரும் இவர்கள், தரை மட்டத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமங்களுக்கு சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்க இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மலைக் கிராம மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், அடிப்படை வசதிகள் கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இது குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறி, உடனடியாக சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் பட்டாக்கள் வழங்கக் கோரி பெரிய மலையூர் கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சேர் வீடு பிரிவு அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதான சாலையான இந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இந்த வழியே செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

அதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் திண்டுக்கல் ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், நத்தம் தாசில்தார் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து மலைக் கிராம மக்கள் கூறுகையில், "கரந்த மலை பகுதியில் பெரிய மலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை என 4 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் நில பட்டா என எந்வொறு அடிப்படை வசதியும் இல்லை. இது குறித்து பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் முறையாக மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக, எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ சமயத்தில் மலையிலிருந்து கீழே அலைத்து வரும்போது வழியிலேயே பிரசவமாகி உயிரிழக்கும் சூழல் உள்ளது. மேலும், அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் எங்களது மலைக் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஆகவே இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே எங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதருவது குறித்து தமிழக அரசு உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக எங்களது ரேசன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.