ETV Bharat / state

போலி பேராசிரியர்கள் விவகாரம்; யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி உறுதி! - MIniser ponmudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 5:40 PM IST

Minister Ponmudi: போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது திமுக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளியில், கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்பி வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அமைச்சர் பொன்முடி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சிறுபான்மை மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது: அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், “சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். கல்வி நிறுவனங்களும், அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் பொன்முடிக்கு நன்றாக தெரியும் என்பதால் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.

கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்நிலையைப் போக்கும் ஆயுதமாக மீண்டும் கல்வி பிறந்தது. குறிப்பாக, 17 சதவீதம் கிறிஸ்தவர்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது ஒரு சதவீதம் தான் உள்ளார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். மேலும், மற்ற ஒரு சமூகம் 70 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுவான உரிமை சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

சிறுபான்மையினர் வாரியம்: தனியாக வழங்கப்பட்ட உரிமைகளிலும் பிரச்சினை உள்ளது. எல்லோரும் சமம் என்ற தன்மை வர வேண்டும். இது நமக்கான அச்சுறுத்தல் இல்லை, தேசத்திற்கான அச்சுறுத்தல். இதற்கான விழிப்புணர்வு வேண்டும்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வை நீக்கி, பொதுமக்களுக்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது.

குறிப்பாக, அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் கல்வி பயின்றவர்களாக இருந்தார்கள். அதற்கு மிக முக்கிய காரணம், அங்கு இருந்த கிறிஸ்தவ மிஷனரிகளே. இதன் காரணமாக தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அவரது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் வாரியம் என்ற ஒன்றை அமைத்தார். அதன் காரணமாக பல சிறுபான்மையினர் பெருமளவில் பயனடைந்தார்கள்.

நான் முதல்வன் திட்டம்: குறிப்பாக, திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்து உள்ளார். இதன் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியாகும். பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், அவர்கள் படிக்கும் பொழுது பலதரப்பட்ட தரவுகளை உள்வாங்கக்கூடிய அளவில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சிறப்பாக அப்படிப்பட்ட ஒன்றுதான் தமிழ்நாடு அரசால் அமைச்சரின் பெயரால் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டம். குறிப்பாக, இளைஞர் திறன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தான் தற்பொழுது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து இளைஞர்களையும் பலதரப்பட்ட தரவுகளை உள்ளடக்கி அளிக்கக்கூடிய நான் முதல்வன் பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெறச் செய்து வருகிறார்.

சமத்துவம் கிடைக்கும் வரை சலுகைகள்: நாங்கள் சிறு வயதில் பள்ளியில் பயிலும் பொழுது மதிய உணவு கேட்டாலே எங்கள் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறிச் சென்று விடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றி காலை சிற்றுண்டியே ஆரம்பப் பள்ளிகளில் தர வைத்தவர் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அன்றைய காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஏனெனில், அந்த அளவிற்கு யாருக்கும் வருமானம் இருந்தது கிடையாது.

இதை நன்கு உணர்ந்த நமது தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அறிவித்து வழங்கி வருகிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில் வேற்றுமையில் ஒற்றுமை, பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் சமத்துவம் என்ற ஒன்றை அடையும் வரை அனைவருக்கும் சலுகைகளை கொடுத்தாக வேண்டும்.

புதுமைப்பெண் திட்டம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற துறை மட்டும் இருந்த வேளையில், அவற்றுடன் சிறுபான்மையினர் துறையையும் சேர்த்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சிறுபான்மைக்காக அதிக அளவில் உழைத்த அரசு தான் திராவிட மாடல் அரசு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “சிறுபான்மையினப் பள்ளியில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டம் எல்லா இடத்திலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக சிறுபான்மையின பள்ளிகளில் படிக்கின்ற மாணவிகளுக்கும் உயர்கல்விக்குச் சென்றால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பையும் முதலமைச்சர் அறிவித்து அதையும் பயன்படுத்திக் கொண்டிருகிறார்.

போலி பேராசிரியர்கள் நியமனம்: இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில், “தமிழக முதலமைச்சர் பல சமூகங்களை ஒன்றிணைத்து அவற்றின் முன்னேற்றத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார். அதன் காரணமாக தான் சமத்துவ வழியில் பெண்கள், விளிம்பு நிலை மக்கள் என அனைவரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள். குறிப்பாக, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் யாருக்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட பல திட்டங்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

சாதி ரீதியில் வன்முறைகள்: இதன் காரணமாக தான் இன்னும் நூறாண்டு காலங்கள் கூட திராவிட அரசியல் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசியம் தேவை இருக்கிறது. திமுக அரசு, பெருந்தலைவர் காமராஜரை புறக்கணித்து பேசுகிறது என்பது மிகவும் ஒரு தவறான கருத்து. பல உலக நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். அதன் அடிப்படையில் தான் இந்தியாவில் மட்டும் தான் சாதி ரீதியில் பல வன்முறைகள், பல புறக்கணிப்புகள் நடைபெற்று வருகிறது என கூறுகிறேன்.

வட மாநிலங்களில் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பல வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்று உள்ளது. ஆனால், தமிழகத்தில் அவை இல்லை என்றால் அதற்கு திராவிட அரசுதான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: Formula 4 கார் பந்தயத்தை இலவசமாக பார்க்கலாம்.. எப்படி தெரியுமா? உதயநிதி வெளியிட்ட முக்கிய தகவல்! - free watch formula 4 car race

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.