ETV Bharat / state

கரூர் அரியாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரி வழக்கு-ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு! - HIGH COURT MADURAI BRANCH

கரூர் அரியாறு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் மாவட்டஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 5:21 PM IST

மதுரை: கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, வடசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரியாறு பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் தலைவர் சுடலை கண்ணு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில்,"கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, வடசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரியாறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக தினந்தோறும் பத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சட்டவிரோத குவாரி மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: இந்தப் பகுதியில் உள்ள ஆற்று படுகையில் 10 மீட்டர் ஆழத்திற்கு இதுபோன்று தோண்டி எடுக்கப்பட்டு திருச்சி நகருக்கு மணல் கடத்தப்பட்டு வருகிறது இதனால் அரசுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அரசு அதிகாரிகளும் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். இந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க மனு அளித்திருந்தேன் அந்த மனு மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: இரவு நேரப் பணியில் இருந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை; மருத்துவமனை இயக்குனர் கைது!

எனவே நீதிமன்றம் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, வடசேரி கிராமத்தின் அரியாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சட்டவிரோதச் மணல் குவாரிகள் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் மேலும் மணல் குவாரி கும்பலெடுத்து துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,"என கூறியிருந்தார்.
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு: இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பல கோடி மதிப்புள்ள மணல்கள் கடத்தப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை முதல் தகவல் அறிக்கை கூட இதுவரை பதிவு செய்யவில்லை எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.