மதுரை: திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கக் கோரி அவசர வழக்கில், பாஜகவினர் தேர்வு செய்த பாதைக்கு அனுமதி வழங்க முடியாது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மாற்றுப் பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
பாஜக நிர்வாகி ராஜசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் இன்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை 04.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ரோட் ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறையிடம் மனு அளித்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் Isuzu goods வாகனம் நிரந்தரமாகப் பதிவு செய்யாமல் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இந்த வாகனம் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தான் வாங்கப்பட்டது ஆனால் இதனைக் கருத்தில் கொள்ளாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, "ரோட் ஷோ நடைபெறத் தேர்வு செய்யப்பட்ட பாதை மிகவும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பாதையாகவும், வாகன நெரிசல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால் அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப் பாதையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாட்டுப் பாதையான கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை 4 மணி முதல் 6 மணி வரை குள். ரோட் ஷோ நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களை நோக்கி நகர்ந்த அரசியல்..அரசியலில் வெற்றிக்கு வழி என்ன? - அண்ணாமலை அட்வைஸ் - K Annamalai