ETV Bharat / state

மதுரை ராஜாஜி மருத்துவமனை அறுவை சிகிச்சை உள்கட்டமைப்பு விவகாரம்..ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு! - Liver Transplantation in TN - LIVER TRANSPLANTATION IN TN

High Court Madurai bench: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 3:36 PM IST

மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, மதுரை வெரோணிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமரவில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது. தென் மாவட்டத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், வழக்கொன்றின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள்ளாக தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், 7 ஆண்டுகளாகியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் கல்லீரல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியாக கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில், அரசுத் தரப்பில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், "மதுரையில் இதுவரை ஒரு சிகிச்சை கூட செய்யப்படவில்லை. ஆனால், ஏராளமானோர் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், "தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் தமிழக அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இதுவரை எத்தனை பேர் பதிவு செய்திருக்கின்றனர்? என்பது தொடர்பான பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை குறைக்க பேரம்? - ஐகோர்ட் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.