ETV Bharat / state

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 7.5% இடஒதுக்கீடு? - ஐகோர்ட் அதிரடி கேள்வி! - 7 point 5 percent reservation - 7 POINT 5 PERCENT RESERVATION

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஏன் கொண்டு வரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 7:44 PM IST

மதுரை: ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பூபேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகளை பெற முடியவில்லை. எனவே, ராமநாதபுரம் நகரில் அரசு மேல் நிலைபள்ளி தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது” என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரிய மனு; சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு!

இதை தொடர்ந்து நீதிபதிகள், மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரத்தில் இதுநாள் வரை அரசு உயர்நிலைப் பள்ளி ஏன் அமைக்கவில்லை? ராமநாதபுரம் மாணவர்கள் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில் ஒன்பது கி.மீ தூரம் செல்ல வேண்டும். தமிழகத்தில் வட்டம், மாவட்டத் தலைநகர்களில் அரசு உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளை அரசு அமைக்க வேண்டும்.

அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் அங்குள்ள அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏன் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பள்ளி கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.