சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்களை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
மேலும் வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளின் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட வட உள்மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை; சென்னை விமான நிலையத்தில் குவியும் பயணிகள்! - டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!
தொடர்ந்து பேசிய அவர், "13 ,14 தேதிகளில் வடகடலோர மாவட்டங்களிலும், 13 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 14 ஆம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் உள்ள காற்றுள்ள தாழ்வு பகுதியானது, இரண்டு அல்லது மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவித்தார். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருவர காலத்திற்கு மிதமான மழை இருக்கும்.
வங்க கடலில் பன்னிரண்டாம் தேதி மேலெடுக்க சுழற்சி உருவாவதற்கான சுழல் நிலவுகிறது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறப்போகிறது, வங்கக் கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கும். இதைக் கண்காணித்து எப்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதை கணிக்கலாம் என குறிப்பிட்டர். மேலும் குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் தென்மேற்கு பருவமழை விலகிய பிறகு தான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்