சென்னை: சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இன்று முதல் கத்திரி வெயில் வருத்தெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் மீம் கிரியேட்டர்கள், "ஓ அப்ப இவ்வளவு நாள் மசாலாதான் தடவிட்டு இருந்துச்சா" என கேட்டுள்ளனர்.
மசாலா தடவி வருக்க சூரியன் தயாராகி இருக்கும் நிலையில், மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட ஒரு அழகு என்ற பாடல் வரிகளும் தற்போது டிரெண்டாகி இருக்கிறது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த பாடலில் வரும் குழந்தையிடம் நெட்டிசன்கள் மீம் மூலமாக ஒரு கேள்வி எழுப்பியுள்ளனர்.
வீட்டிற்குள் இருந்தாலும்... ஃபேன் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அல்லாடி வரும் நிலையில், சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கிறதோ என்று அனைவருக்கும் தோன்றி இருக்கும்.. அப்படி தோன்றியதன் விளைவாக உருவான மீம்.
இதற்கு இடையில் கோடை விடுமுறை வேறு.. வீட்டில் குழந்தைகளை வைத்து தாக்காட்ட முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். சூரியனாவது, வெயிலாவது வெளியே போய் விளையாடியே ஆக வேண்டும் என நினைத்த குழந்தை வீட்டிற்கு திரும்பி வந்தபோது அப்பவுக்கும், குழந்தைக்கும் இடையே நடைபெற்ற உறையாடல் மீமை கொஞ்சம் பாருங்கள்.
இதெல்லாம் பராவாயில்லை... இன்று பராமரிப்பு பணிக்காக முழு நேரம் மின் வெட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் EB அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்த நபரால் அலுவலர் கடுப்பாகி மீன் இன்னும் அல்டிமேட்..
கடைசியாக... வானிலை ஆய்வு மைய இயக்குநர் குருநாதர் ரமணனுக்கும் ஒரு மீம் போட்டு விட்டார்கள். அவர் இல்லாத வானிலை அறிக்கையா? நெவர்...!
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெப்பம் எப்போது தணியும்? - பாலச்சந்திரன் கூறிய குட் நியூஸ்! - Tamil Nadu Weather Report