ETV Bharat / state

தலைகீழாக மாறும் வானிலை.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையத் தொடங்கிய வெப்பம்! - TN Rain

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 9:53 PM IST

Tamil Nadu Weather Report: தமிழகத்தில் இன்றைய தினம் 10 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

Rain File Picture
Rain File Picture (Credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோடை தொடங்கியவுடன் அது உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றில் இல்லாத அளவில் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வெயில் சுட்டெரித்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக 20 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகிய சூழ்நிலையில், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில், தற்போது தொடர்ந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தான், இன்றைய தினம் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

மேலும், கோவையில் 101.12 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 105.80 டிகிரி பாரன்ஹீட், மதுரை நகரம் 103.28 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 105.26 டிகிரி பாரன்ஹீட், நாமக்கல் மற்றும் பாளையங்கோட்டையில் 102.20 டிகிரி பாரன்ஹீட், சேலம் 100.40 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூர் 100.76 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 103.10 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் தீவிரம்! கொசுக்களால் பரவும் வைரஸ் காய்ச்சல் - தமிழகம் உஷார்! - Kerala West Nile Fever

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.