ETV Bharat / state

திருமணத்தை மறைத்து திருமணம் சென்னையைச் சேர்ந்த மருத்துவருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Madurai High Court Branch: சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆசிக் அலிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி இந்தியா முழுவதும் நாளிதழ்களில் விளம்பரப்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை
madurai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 7:43 PM IST

மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் இர்பான நஸ்ரின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனக்குக் கடந்த ஏப்ரல் 2021ஆம் ஆண்டு சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆசிக் அலி என்பவருடன் மதுரையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு 200 சவரன் நகை, ரூபாய் 5 லட்ச மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக எனது பெற்றோர் கொடுத்தனர். பின்னர் கணவரின் விருப்பப் படி சென்னையில் இருவரும் வசித்து வந்தோம். ஆனால், எனது கணவரின் செயலில் சில மாற்றங்கள் தெரிந்தது. திருமணம் நடந்து பல நாட்களாக அவர் என்னோடு எந்த உறவும் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஆண்மை இல்லாதவர் என்றும் இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவகாரத்து ஆனதும் தெரிய வந்தது.

இது குறித்து எனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தேன். இதனால், பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் எனது கணவர் யாரிடமும் தகவல் செல்லாமல் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். பாதிக்கப்பட்ட நான் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால், முறையாக விசாரணை செய்யவில்லை.

பின்னர், நீதிமன்றத்தில் பிரிவு 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடத்தி 4 மாதங்களில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள கணவர் ஆசிக் அலி இதுவரை விசாரணைக்கு ஆஜராக வில்லை. இது வரை 5 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முறை கூட சம்மன் பெறவில்லை. பதிவுத் தபால் மூலம் சம்மன் அனுப்பப்பட்ட போதும் காவலர்கள் நேரில் சென்ற போது வீடு பூட்டப் பட்டுள்ளது என திரும்பி விட்டனர். எனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்கும் விதமாக எனது கணவரை வழக்கில் ஆஜர்படுத்தி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சக்தி குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை செய்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், கணவர் ஐந்து முறை வழக்கில் ஆஜராகச் சம்மன் அனுப்பியும் கதவு பூட்டப்பட்டுள்ளது என சம்மன் திரும்பி உள்ளது. வாட்ஸ் அஃப் மூலமாகவும் சம்மன் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.

எனவே, தல்லாகுளம் காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். லுக் அவுட் நோட்டீசை இந்தியா முழுவதும் தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். அந்த விளம்பரத்தில் 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என தெரிவித்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடையாவிட்டால் நீதிபதி இந்த வழக்கைத் தன்னிச்சையாக நடத்தி உரியத் தீர்ப்பு வழங்கலாம். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால் ஜாமீனை ரத்து செய்யக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் காவல் ஆய்வாளர் மீது மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: கோவை தொகுதியில் களமிறங்கும் அண்ணாமலை.. பாஜகவின் பக்கா பிளான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.