ETV Bharat / state

கந்த சஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - KANDHA SASTI TIRUCHENDUR TEMPLE

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பான விசாரணையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai Bench
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 8:24 AM IST

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடை செய்ய உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 6 நாள்கள் கந்த சஷ்டி விழா நவ.2 ஆம் தேதி துவங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 7-ஆவது நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கந்த சஷ்டி விழாவின் போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள்.

சுப்பிரமணிய திருக்கோயிலில் சாதாரண நாள்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக ஒரு நபருக்கு ரூ.100 வசூல் செய்கிறார்கள். அதே கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்துள்ளார்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000, விஸ்வரூப தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.2,000 மற்றும் அபிஷேகம் தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டண உயர்வு அமல் படுத்தப்படவில்லை. கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை திருத்தப்பட்ட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: களம் புறம்போக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட்? - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

கடந்த 2023ஆம் ஆண்டு கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. விரைவு வரிசைக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூல் செய்தனர். பக்தர்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அதற்காக சுமார் 200 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் வருகிற கந்த சஷ்டியின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 வசூல் செய்ய உள்ளதாகவும், அது குறித்து ஆட்சேபனைகள் அளிக்க 03.10.2024 அன்று இறுதி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த இவ்வாறு தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது தவறு. விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள் கடவுளைத் தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, கந்த சஷ்டி விழாவின் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.

மேலும், சுவாமி தரிசனங்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு முன் கூட்டியே டோக்கன் இணையதளம் மூலம் அளிக்க வேண்டும் எனவும், கோயில் வளாகத்தில் தரிசன டோக்கன் அளிக்க ஐந்து இடங்களிலாவது தனி கவுன்டர்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.