ETV Bharat / state

'தேவாலய சொத்துக்களையும் பதிவுத்துறை சட்டத்தின்கீழ் பதிவு செய்க' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி - TELC Property Case - TELC PROPERTY CASE

Church properties under registration actகோவில் மற்றும் வஃக்பு வாரிய சொத்துக்களைப் போல, கிறிஸ்துவ தேவாலய சொத்துக்களையும் பாதுகாக்க பதிவுத்துறை சட்டத்தின் கீழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:58 AM IST

மதுரை: கோயில் மற்றும் வஃக்பு வாரிய சொத்துக்களை பாதுகாப்பது போல், கிறிஸ்துவ தேவாலய சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில், தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'நான் விஜயா என்பவரிடமிருந்து 2023-ல் சொத்து வாங்கினேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக சார் பதிவாளர் 29.3.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திருப்பத்தூர் சார் பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில் தமிழ் எவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டிஇஎல்சி) சொத்துக்களை உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இவற்றின் அடிப்படையில் மனுதாரரின் சொத்து பதிவு விண்ணப்பம் நிராகரக்கப்பட்டது எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “இந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத்துறை சட்டத்தில் தேவாலய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. இந்து கோயில் சொத்துக்கள் இந்த சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வக்போர்டு சொத்துக்கள் வக்புவாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன.

கிறிஸ்துவ ஆலய சொத்துக்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா மதசார்பற்ற நாடு என்பதால், அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். ஆகவே, தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. டிஇஎல்சி சொத்து வழக்கில் பிரதான மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை. எனவே, தற்போது டிஇஎல்சி சொத்துக்களைப் பொறுத்தவரை எந்த தடையும் இல்லை. திருப்பத்தூர் சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “எங்களிடம் தலைக்கட்டு வரி வாங்கவில்லை”.. திருச்சி ஆட்சியருக்கு பறந்த உத்தரவு! - Thalaikattu Vari

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.