ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட்டில் பயங்கர தீ விபத்து! - Gummidipoondi Fire accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 9:36 PM IST

Gummidipoondi Fire accident: கும்மிடிப்பூண்டி அருகே தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற குப்பை கொட்டும் இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி  தீ விபத்து புகைப்படம்
கும்மிடிப்பூண்டி தீ விபத்து புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் மற்றும் தீபாவளி காலங்களில் வெடித்த பட்டாசு கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை, தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற இடத்தில் கொட்டி வைக்கப்படுகிறது. 40-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பல்லாயிரம் டன் குப்பைகள் கொட்டி மண்ணில் மக்க வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் தீ மளமளவென எரிந்து வருகிறது. வானுயர கரும்புகை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படும் என்பதால், காவல்துறையினர், பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 53 வழக்குகள்... தமிழகத்தை சேர்ந்த பிரபல குற்றவாளி கேரள சிறை வளாகத்தில் இருந்து தப்பியோட்டம்! - Criminal Balamurugan Escape

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.