ETV Bharat / state

கம்பகரேஸ்வர சுவாமி கோயிலில் 1008 மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு கோலாகலம்! - Kampahareswar Temple

Kampahareswar Temple: கும்பகோணம் அருகே உள்ள கம்பகரேஸ்வர சுவாமி கோயில் மாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் தலைமையில் ஒரே சமயத்தில் 1008 மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

grand bharathanatiyam dance held on the eve of kampahareswar temple kumbhabhishekham
கம்பகரேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான பரதநாட்டிய நடனம் நடைபெற்றது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 8:06 PM IST

கம்பகரேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான பரதநாட்டிய நடனம் நடைபெற்றது

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற சரபேஸ்வர ஸ்தலமாக போற்றிப்படும் அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், ஒரே சமயத்தில் 1008 மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு இன்று (ஜன.30) சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்ணார கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தமிழகத்திலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் ஸ்தலமாக போற்றி வணங்கப்பெறும், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.

3-ம் குலோத்துங்கச் சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில், சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களைக் கொண்டது. இக்கோயிலில் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று, நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், பரதநாட்டிய பயிற்சி பெற்று வரும் 1008 மாணவியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு, ஒரே சமயத்தில் பரதம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இதனை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்களும், பொது மக்களுக்கும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் 8-ம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹதி மற்றும் மகா கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் இக்கும்பாபிஷேக நிகழ்வில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி, தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 16 ஆண்டுகளுக்கு பின் கம்பகரேஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேக விழா! சிறப்பு பூஜைகளுடன் துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.