திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டின்படி, 556 மாணவர்கள். அதில், 432 மாணவர்கள் வருகை புரிந்துள்ளதாக வருகைப் பதிவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வின்போது, 266 மாணவர்கள் மட்டுமே அன்று வருகை புரிந்துள்ளனர். வருகை பதிவேட்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், EMIS-ல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் 16 ஆசிரியர் இருந்ததாக கூறப்படுகிறது. 8 ஆசிரியர்கள் கூடுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு அதிகப்படியான நிதி இழப்பு ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷ் அதிரடியாக பொன்னேரி வட்டாரக் கல்வி அலவலர், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலி கணக்கு காண்பிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப் 6ம் தேதி தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷ் பொன்னேரி வட்டாரக் கல்வி அலவலர் மேரி ஜேஷ்பின், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பம்மதுகுளம், தலைமை ஆசிரியை லதா ஆகியோரை அதிகாரப்பூர்வமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள பள்ளிகள் ஆய்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் மாணவர் சேர்க்கை: 101 கல்லூரிகளில் 25% க்கும் கீழ் தான் அட்மிஷன்; வெளியான அதிர்ச்சி தகவல்! - engineering course seats vacant