ETV Bharat / state

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத உள்ஒதுக்கீடு; அரசாணை 151-ஐ ரத்து செய்ய வலியுறுத்தல்! - GO Number 151

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:09 PM IST

PG Doctor Course: தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50 சதவீத இடங்கள் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சில துறைகளில் பணியிடங்கள் இல்லை என நடப்பு கல்வியாண்டு முதல் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை எண் 151ஐ ரத்து செய்ய வேண்டும் என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

TN
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு மருத்துவ பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50% இடங்கள் உள் ஒதுக்கீடாக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்ட சில துறைகளில் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி 2024-2025 வருடம் முதல் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை எண் 151-ஐ மருத்துவத் துறை வெளியிட்டிருக்கிறது.

ஆனால் அவர்கள் குறிப்பிடும் துறைகளில் தேசிய மருத்துவ ஆணைய இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான UG அல்லது PG Minimum Standard Requirements 2023 விதிகளின் படி ஒவ்வொரு துறையிலும் சுமார் 100 பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.தேசிய மருத்துவ ஆணையம் MSR 2023 இளநிலை,முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான குறைந்த பட்ச அளவு மட்டும் தான்.

ஆனால், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால் தேவையான பணியிடங்களே உருவாக்காமல் செயற்கையாக மிகையான தோற்றம் உருவாகி வருகிறது என சொல்லி குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்கள் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு தர மறுப்பது எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட பிற்போக்கான நடவடிக்கை ஆகும். இதனை அரசு உடனடியாக திரும்ப பெற்று விதிகளின் படி தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஏற்படுத்திய அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டினால் தான் தேவையான மருத்துவ பேராசிரியர்கள் உருவாக்கப் பெற்று இன்றைக்கு தமிழ் நாட்டில் இந்திய அளவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உருவாக காரணம். மருத்துவர்களும் ஆர்வத்துடன் அரசுப் பணியில் கிராம புற சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிறப்பு மருத்துவர்கள் தாலூகா ஊரக மருத்துவமனைகளில் எளிய மக்களுக்கு தரமான இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அரசாணை மூலம் எதிர்காலத்தில் அரசு பணியில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தரமான சிறப்பு சிகிச்சைகளும் சேவையும் பாதிக்கப்படும். எனவே, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கிறது. இது அரசு மருத்துவர்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையே” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2019 நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு; என்டிஏவுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.