ETV Bharat / state

நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்? - அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? - Gudiyatham sexual harassment issue - GUDIYATHAM SEXUAL HARASSMENT ISSUE

Gudiyatham Sexual Harassment: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவியிடம் அத்துமீறியதாக மருத்துவரை போலீசார் கைது செய்துள்ள சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் பாபு
கைது செய்யப்பட்ட மருத்துவர் பாபு (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 10:58 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 19 வயது நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர், 2 மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருபவர் எஸ்.பாபு.

இந்த நிலையில், அரசு மருத்துவர் பாபு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் நர்சிங் பயிற்சிக்காக வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கூச்சலிட்டுக் கொண்டே அறையிலிருந்து வெளியே ஓடி வந்து, இதுகுறித்து அங்கு பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் நர்சிங் மாணவியின் பெற்றோர், ஆக.31ஆம் தேதி மருத்துவர் பாபு மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அப்போது மருத்துவர் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், கடந்த செப்.4ஆம் தேதி ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாபு மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அரசு மருத்துவர் பாபுவை நேற்று திருச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு மருத்துவர் பாபுவை நேற்று மாலை வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் போலீசார் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாபுவை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில், பயிற்சிக்கு வந்த செவிலியர் மாணவியிடம் மருத்துவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் மருத்துவர்கள் மத்தியிலும், செவிலியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மணிப்பூரில் மீண்டும் மோதல்.. ராக்கெட் குண்டுகள் தாக்குதலில் 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.