ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! - Prohibition Amendment Bill - PROHIBITION AMENDMENT BILL

Prohibition Amendment Bill: கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 5:46 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரையில் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக கடந்த ஜூன் 29ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமி, மதுவிலக்கு சட்டத் திருத்தம் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். சட்டப்பேரவையில் அந்த மசோதாவுக்கு ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டத்திருத்த மசோதாவின் விவரங்கள்: கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் படி, விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி, அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. மனித உயிருக்கு கேடு விளைக்க வைக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படகூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால், கள்ளசாரய விற்பனை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிறை தண்டனின் கால அளவு மற்றும் தண்டனைத் தொகையின் அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்படும். மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களில் மூடி முத்திரையிடவும், குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு, கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றங்கள் செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை, அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில், இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: "அரசியல் முதிர்ச்சியில்லாத தலைவர் சீமான்" - அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.