திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன்(28). இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில், இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் சரண்யா(31) என்ற செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து விலகி விடுவதாகச் செவிலியர் சரண்யாவை மருத்துவர் சீனிவாசன் மிரட்டியதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், மன உலைச்சலுக்கு ஆளான சரண்யா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செவிலியர் சரண்யா தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில், வத்தலக்குண்டு போலீசார் அரசு மருத்துவர் சீனிவாசனை கைது செய்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செவிலியர் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் அருகே இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது!