ETV Bharat / state

ராஜபாளையத்தில் திடீரென உடைந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு.. அச்சத்தில் பயணிகள்! - Bus Foodboard Broken issue - BUS FOODBOARD BROKEN ISSUE

Government Bus Food Board Suddenly Broken: ராஜபாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்தின் பின்புறப் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Government Bus Food Board Suddenly Broken

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 5:26 PM IST

ராஜபாளையத்தில் திடீரென உடைந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு.. அச்சத்தில் பயணிகள்!

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை இயக்கப்படும் நகரப் பேருந்து இன்று(ஏப்.15) மதியம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையோரம் விழுந்தது.

அந்த சமயம் படிக்கட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. இதையறிந்த ஓட்டுநர், படிக்கட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு பயணிகளை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், பயணிகளை இறக்கி விட்டுத் திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை எடுத்துக் கொண்டு பணிமனைக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு.. 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சிபிஐக்கு எதிராகக் சிறப்பு நீதிமன்றம் கண்டனம்! - Gutka Scam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.