ETV Bharat / state

கர்ப்பிணி சென்ற கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. சென்னையில் நடைபெற்ற பல்வேறு விபத்துகள்! - govt bus collided with car - GOVT BUS COLLIDED WITH CAR

Government bus collided with the car: தண்டையார்பேட்டையில் நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்த கார் மீது அரசுப் பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த கர்ப்பிணி உயிர் தப்பியுள்ளார்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 5:23 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று (ஆக.18) மாலை நடைபெற இருக்கிறது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார். இதன் காரணமாக, சென்னை முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை பீச் ஸ்டேஷனலிருந்து தீவுத்திடல் போகும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் இருந்தவர் மதுபோதையில் காரை இயக்கினாரா? அல்லது காரில் வேறு பிரச்னை உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த தரணிதரன் என்பவர் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவத்தால் தீவுத்திடல் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகளை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டையார்பேட்டையில் கர்ப்பிணி சென்ற கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து;

தண்டையார்பேட்டையில் நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்த கார் மீது அரசுப் பேருந்து மோதியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கௌஷிக். இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் (8 மாத நிறைமாத கர்ப்பிணி) அண்ணாசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், கார் தண்டையார்பேட்டை ஜீவரத்தினம் சாலை வழியாக வந்து கொண்டிருந்த நிலையில், அவ்வழியில் எதிரே வந்த மணலி - பிராட்வே 56d வழித்தட பேருந்து கார் மீது மோதியுள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த கௌஷிக், அவரின் தாய் மற்றும் கர்ப்பிணி சகோதரி மூவரும் காயமின்றி உயிர்தப்பியுள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநர் சண்முகம் கவனக்குறைவால் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைக் காவலரை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்;

தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் கிண்டி காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் தி.நகர் கண்ணம்மாபேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டாடா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக வாகனத்தின் மீது இடித்துள்ளது. இதில் அவரும், அவரது மனைவியும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் விஜயகுமாருக்கு இடுப்பு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தலைமைக் காவலர் விஜயகுமாரின் மனைவி ஷைலஜா தங்களை இடித்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு நிற்காமல் சென்ற டாடா ஏசி வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.