ETV Bharat / state

மளமளவென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா? - Gold and Silver rate in chennai - GOLD AND SILVER RATE IN CHENNAI

Today Gold and Silver Rate: சென்னையில் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்துள்ள நிலையில், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,845க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold and Silver rate today in Chennai
Gold and Silver rate today in Chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 10:48 AM IST

Updated : Apr 23, 2024, 10:56 AM IST

சென்னை: கடந்த சில நாட்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை அவ்வப்போது குறையவும் செய்கின்றது. இருப்பினும் பெரிய அளவில் விலை குறைவதில்லை. ஆனால், அதிரடியாக ஏற்றம் காணும் தங்கம் விலை, குறையும் போது மிகவும் சொற்பமான அளவில் குறைவது மக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதில் குழப்பம் அடைகின்றனர்.

இந்திய மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் அமைகிறது. ஆனால், தற்போது சாமானிய மக்களின் எட்டாக்கனியாகத் தங்கம் மாறி வரும் நிலையில், தற்போது தங்கத்தில் விலை சிறிதளவு குறைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 885க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 80க்கும் விற்பனையானது. இதனிடையே, வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு வெறும் 40 ரூபாய் குறைந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில், இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 760-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 520க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.89 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 22):

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,845
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,760
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,315
  • 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.58,520
  • 1 கிராம் வெள்ளி - ரூ.89
  • 1 கிலோ வெள்ளி - ரூ.89,000

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம்.. பெரிய நந்திக்கு சிறப்புப் பூஜை வழிபாடு!

Last Updated : Apr 23, 2024, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.