ETV Bharat / state

அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு ஆட்டு குட்டி பரிசு.. கோவையில் ருசிகரம்! - TRB RAJAA GETS GOAT AS GIFT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:30 PM IST

TRB Rajaa: கோயம்புத்தூர் மருதமலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு, திமுக ஐ.டி விங் நிர்வாகி ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது

TRB RAJA ELECTION CAMPAIGN
TRB RAJA ELECTION CAMPAIGN
TRB RAJA ELECTION CAMPAIGN

கோயம்புத்தூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளான இன்று, கோவையில் பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர், அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்த கணபதி ராஜ்குமார், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, மருதமலையில் ராஜ்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, உடன் இருந்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு, திமுக ஐடி விங் மருதமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அண்ணாமலை அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “தேர்தல் முடிந்தவுடன் சுவையான ஆட்டு பிரியாணி கோவைக்கு ரெடி” என கூறினார். அது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது அமைச்சருக்கு ஆட்டுக்குட்டி வழங்கியது டிரெண்டாகி வருகிறது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்ட சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், அண்ணா சிலையில் இருந்து 1,000க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி! - TN VOTE COUNTING

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.