ETV Bharat / state

"ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள்" - ஜி.கே.மணி பேச்சு! - ONE NATION ONE ELECTION

ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல திட்டம் தான்; ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் நிறைய உள்ளது என்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சேலம் : வரும் டிச 21ம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து இன்று ( டிச 14) சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பாமக சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் மேட்டூர் அணை நிரம்பி, அதன் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் வீணாகாமல் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும்.

இதையும் படிங்க : "விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் அப்புறம் பார்ப்போம்" - பிரேமலதா பேச்சு!

மேலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.2000 முழுமையாக பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடையவில்லை.

கடந்த முறை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்காதவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் கொடுத்த அரசு பிற மாவட்டங்களுக்கு ரூ.2000 தான் கொடுக்கிறார்கள். எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என்று பாமக சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல திட்டம் தான் ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் நிறைய உள்ளது என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.