ETV Bharat / state

முதல்நாள் சமைத்த சிக்கனை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு! ஒவ்வாமையில் பறிபோன உயிர்!

அரியலூர் அருகே வீட்டில் முதல்நாள் சமைத்த சிக்கன் உணவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 8:50 PM IST

government hospital jayankondam
government hospital jayankondam

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், அன்பரசி தம்பதியினர். இவர்களுக்கு துவாரகா (வயது 15) மற்றும் இலக்கியா (வயது 12) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கோவிந்தராஜ் குடும்பத்தினர், முதல் நாள் சமைத்த சிக்கன் உணவை மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு ஒவ்வாமை காரணமாக சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "சட்டம் அனைவருக்கும் பொதுவானது.. அரசு அதிகாரி என்பதால் விலக்கு பெற முடியாது"- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.