ETV Bharat / state

கேரளாவில் காணாமல் போன காரில் கஞ்சா கடத்தல்.. பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கிய 3 பேரின் பின்னணி என்ன? - Ganja smuggling in a missing car - GANJA SMUGGLING IN A MISSING CAR

Missing car used for drug smuggling: கேரளாவில் காணாமல் போன காரை கடத்தி கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய மூன்று பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மங்களமேடு காவல் நிலையதம் மற்றும்  கஞ்சா கடத்தி வரப்பட்ட கார்
மங்களமேடு காவல் நிலையதம் மற்றும் கஞ்சா கடத்தி வரப்பட்ட கார் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 8:07 PM IST

தேனி: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவில் மாருதி எர்டிகா கார் ஒன்று காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், காணாமல் போன அதே கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதாக காரின் உரிமையாளருக்கு ஜிபிஎஸ் சிக்னல் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, காரின் உரிமையாளர் அளித்த தகவலின் படி, பெரம்பலூர் மாவட்ட போலீசார், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவு பாதை என்ற இடத்தில் அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் இருந்த மூன்று பேர் காரை விட்டு கீழே இறங்கி தப்பி ஓட முயன்ற போது, பெரம்பலூர் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

விசாரணை: விசாரணையின் போது, கார் டிக்கியை திறந்து பார்த்த பெரம்பலூர் போலீசார், ஆந்திரா கார்கோடாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 140 கிலோ கொண்ட 70க்கும் மேற்பட்ட கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா காரை மீட்டு, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும், மங்களமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் சிசிடிவி கேமராவை உடைத்த மர்ம நபர்.. வெளியான சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.