ETV Bharat / state

செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா? - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

Kilambakkam Bus stand New rules : ஜனவரி 30ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 10:47 PM IST

Updated : Jan 29, 2024, 10:14 PM IST

சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்கு பின்னரும் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் புறப்படும் இடம் கிளாம்பாக்கத்தில் இருந்து என மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜன.28) வெளியிட்ட தகவலில், 'சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடங்களும் கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன. பின்னர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகள் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 160 பேருந்துகளின் நடைகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் இயக்கப்பட மாட்டாது என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகளும் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை! குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை!

Last Updated : Jan 29, 2024, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.