ETV Bharat / state

ஆதி திராவிடரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா.. அதனை திரும்பப் பெறமுடியாது - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - patta for adi dravidar

Free house plots for Adi Dravidar: ஆதி திராவிடர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை அவர்களிடமிருந்து திரும்ப பெற அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
ஆதி திராவிடர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா.. அதனை திரும்பப் பெறமுடியாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 5:20 PM IST

சென்னை: கடந்த 1998ஆம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச விட்டு மனை பட்டாக்களில் யாரும் இதுவரை வீடுகள் கட்டாததால், அவற்றைத் திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கு இன்று (மார்ச்.18) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களைத் திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

தமிழக அரசால் கடந்த 1998ஆம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த வீடுகள் இல்லாத 91 பேருக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. கடந்த 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த வீட்டுமனை பட்டாக்களில், இதுவரை யாரும் வீடுகள் கட்டாததால், இலவச மனைகளைத் திரும்பப் பெற்று அரசின் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என நாராயணசாமி கவுண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இலவசமாகக் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை, திரும்பப் பெற உத்தரவிட முடியாது என தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச்.18) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலியாக உள்ள மனைகளைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா வழங்கப்பட்டது. பட்டாவைத் திரும்பப் பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை” என தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கப் பசை கடத்தலுக்குத் துணை போன விமான நிலைய ஊழியர்! சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.