ETV Bharat / state

தூக்க மாத்திரையை தவறுதலாக விழுங்கி குழந்தை மரணம்.. வேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு..! - chennai girl child death - CHENNAI GIRL CHILD DEATH

sleeping pills death in chennai: சென்னை அடுத்த சேலையூரில் தாயின் தூக்க மாத்திரையை தவறுதலாக உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை மரணத்தில் சந்தேகிக்கும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த வீடு மற்றும் சேலையூர் காவல் நிலையம்
சம்பவம் நடந்த வீடு மற்றும் சேலையூர் காவல் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 4:05 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தில் வசித்து வருபவர் அஸ்வினி (31). இவர் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பனி புரிந்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை பார்த்து வரும் சூழலில் அஸ்வினி தனது தாயுடன் வசித்து வருகிறார். அஸ்வினிக்கு ஹிரிதிவ் (7) என்ற மகனும், ஹார்த்ரா (4) என்ற மகளும் இருந்த நிலையில், மகன் ஹிரிதிவ் உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார்.

இதனால் தாய் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரையில் தூக்க மாத்திரைகளை தினமும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில். அஸ்வினி நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கையின் பக்கத்தில் மாத்திரைகளை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது எல்கேஜி படிக்கும் மகள் ஹார்த்ரா (4), தூக்க மாத்திரையை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர். காலை 4 மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்துள்ளது. பிறகு அஸ்வினி மகள் இறந்து விட்ட சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவருக்கும் தகவல் தெரிவித்து விட்டு, கழிவறைக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காலை குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்ய பாட்டி சுதா வந்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அஸ்வினியும், குழந்தை நுரை தள்ளியும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற சேலையூர் போலீசார் அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதால் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

இதையும் படிங்க: சென்னையில் இடி மின்னலுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.