சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாம் முரளி(22). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று(ஏப்.29) மாலை புதுவண்ணாரப்பேட்டை M.P.T குடியிருப்பு பகுதியில் பாம் முரளி மது அருந்திக் கொண்டிருக்க, அருகாமையில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு ரவுடியான மனோஜ் கும்பலுடன் பாம் முரளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த மனோஜ் கட்டையை எடுத்து பாம் முரளி தலையில் அடித்துள்ளார். பின்னர், பாம் முரளி தனது கூட்டாளிகளுடன் வந்து கத்தியால் மனோஜின் தலையிலும், தொடையிலும் வெட்டியுள்ளார்.
இதுகுறித்த தகவல் உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பாம் முரளி மற்றும் அவரது கூட்டாளிகளான முகேஷ்(23), விக்கி(22), சஞ்சய்(19) ஆகிய நான்கு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மனோஜ் மற்றும் அவரது கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரம்; வதந்தி பரப்புவதாகக் கிராம மக்கள் மனு! - Pudukottai Collector Office