ETV Bharat / state

திருவண்ணாமலை: இருவேறு விபத்துகளில் கிரிவலம் வந்த பக்தர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி! - Tiruvannamalai car accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 5:06 PM IST

Tiruvannamalai car accident: திருவண்ணாமலையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு ஆந்திரா திரும்பிய பக்தர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை விபத்து புகைப்படம்
திருவண்ணாமலை விபத்து புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை புறவழிச் சாலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு காரில் சொந்த ஊர் சென்றனர். கார் குருவிமலை பகுதியில் சென்ற போது எதிர் திசையில் சென்னை நோக்கி இரு வாலிபர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே போல் திருவண்ணாமலை கலசபாக்கம் அடுத்த குருவிமலை அருகே பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த கார், வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஜெகன்மோகன் (17) பிரவிளிகா (34) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணித்த சாயிக் நயாக் ரசூல் (25) சுஜாதா(28) ஆதிநாராயணா(45) ருசிங்கம்மாள்(42) ஜோதி(35) வரலட்சுமி(55) கோபால்(37) நிர்மலா(40) லலிதா(19) தவிட்டி நாயுடு(38) ஆகிய பத்து நபர்கள் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்கள் மூலம் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் என்பதால் திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்து சாலைகளில் வாகன நெரிசல் அதிகாக இருந்தது. இந்த விபத்துகளாக அந்தந்த பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கார் மெக்கானிக் ஓட்டிச் சென்ற காரில் திடீர் தீ.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? - Car Caught Fire

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.