ETV Bharat / state

"நானே ஒரு தாழ்த்தப்பட்டவன்..” சீமான் பேச்சு! - seeman - SEEMAN

Seeman: "என்னுடைய அரசியலைச் சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாதக சீமான் செய்தியாளர் சந்திப்பு
நாதக சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 8:00 PM IST

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள நெல்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வந்தார்.

நாதக சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “பைபிள், கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சண்டாளன் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தையைக் கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அநியாயம். நானே ஒரு தாழ்த்தப்பட்டவன், என் மீது ஏன் வழக்கு தொடுத்துள்ளனர். என்னுடைய அரசியலைச் சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும், விளையாட்டில் ஆர்வம் இருந்தும் விளையாட வாய்ப்பு இல்லாத சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து, ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகள் கொடுத்து உரிய போட்டிகளை நடத்த வேண்டும். ஆனால், மேல்தட்டு மக்களுக்காக பார்முலா கார் பந்தயம் தேவையற்றது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி, பணத் திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது. இது அநியாயம், கார் பந்தயம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை மாற்றி அமையுங்கள், சிதிலமடைந்துள்ள ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள், மேற்கூரைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறை மட்டுமே உள்ளது, இதையெல்லாம் சீரமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர்கள் இதற்கு முன் எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளனர்? 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, 30,000 பேருக்கு வேலை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கூறினார்.

இந்த முதலீடாவது ஈர்க்கப்பட்டதா? இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றார். இப்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ஏதாவது தமிழகத்திற்கு வந்துள்ளதா? தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பது தான் பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமைகிறது.

மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீண்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய அவர், போதைப் பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “பார்முலா 4 கார் ரேஸா, இல்ல..?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.