ETV Bharat / state

"மோடியின் ஆட்சியில் இந்தியா விரைவில் 3வது வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறும்"- வெங்கையா நாயுடு! - Former VicePresident Venkaiah Naidu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 7:12 AM IST

Former Vice President Venkaiah Naidu: இன்றைய இளைஞர்கள் குறிக்கோளுடன் நேர்மை தன்மையாக வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும் என்றும், இந்தியா விரைவில் 3வது வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக மாறும் என்றும் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

தனது பிறந்தநாள் விழாவில் வெங்கையா நாயுடு
தனது பிறந்தநாள் விழாவில் வெங்கையா நாயுடு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் அவர் 50 ஆண்டு காலமாக இந்தியாவிற்கு ஆற்றிய சேவை பணியை கொண்டாடும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே வாசன், கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதிஷ், நமிதா உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பாடகி எஸ்.பி சைலஜா, நடிகர் விஷால், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார், பத்ம விபூஷன் வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். மேடையில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "வெங்கையா நாயுடுவை இந்தியாவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தேசப்பற்று, தாய் பற்று, எடுத்துக் கொண்ட முடிவில் உறுதி, கடின உழைப்பு, மனிதநேயம் என அனைத்திலும் சிறந்தவர்.

வெங்கையா நாயுடு பிறந்தநாள் விழா
வெங்கையா நாயுடு பிறந்தநாள் விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

விவசாயியாக இருந்து இந்தியாவின் உயரிய பதவியான துணைத் குடியரசு தலைவராக இருந்தவர். எனது தந்தை ஜி.கே மூப்பனாரும், வெங்கையா நாயுடுவும் மிகவும் நெருங்கியவர்கள். வெங்கையா நாயுடுவின் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததில் பெருமை. வெங்கையா நாயுடுவின் பணி நாட்டுக்கு தொடர்ந்து தேவை" என தெரிவித்தார்.

மேடையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "தாய் நாட்டிற்கும், தேசத்திற்கு பல நல்ல பணிகளை செய்தவர். வெங்கையா நாயுடுவின் வார்த்தைகள் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் பாய்ந்திருக்கிறது. அவருடைய சேவை தாய் நாட்டிற்கு தொடர்ச்சியாக தேவை" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பழகுவதற்கு நல்ல பண்பாளர். தாய்மொழிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர். பன்முகத்தன்மை கொண்டவர். இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிக்கு ஒப்புதல் வழங்கியவர். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடிய சமூக போராளி. அரசியலுக்கு ஓய்வு கிடையாது. அவரது பணி தொடரவேண்டும்" என கூறினார்.

இதன்பிறகு மேடையில் பேசிய நடிகர் விஷால், "நீங்கள் அரசியல் வாதி மட்டுமல்ல, அதற்கும் மேல் சிறந்தவர். எனக்கும் ஊக்கம் அளிப்பவர். வெங்கையா நாயுடுவை பார்த்து மற்ற அரசியல்வாதிகளுக்கு கூட இவரை போன்ற அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எனக்கு கூட இவரை போன்ற அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை வரலாம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "என்னை போன்றோர் மேடையில் நிற்க காரணம் வெங்கையா நாயுடு தான். கட்சியில் சேர்ந்த போது எனக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமாக இருந்தவர். அடுக்கு மொழியை அடுக்கடுக்காக பேசுவதில் கைத் தேர்ந்தவர். ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் புரிய வைப்பவர். எங்களுக்கெல்லாம் பாஜகவில் முன் உதாரணமாகவும் பக்க பலமாகவும் இருந்தவர். ராஜ்ய சபாவில் அவர் நடந்து வருவதையே வியந்து பார்ப்பேன்" என கூறினார்.

பின்னர் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், "வெங்கையா நாயுடு உடன் ஏறத்தாழ 15 ஆண்டுகள் நட்புடன் பழகி வருகிறேன். நாங்கள் பல பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளோம். அதற்கெல்லாம் தலை சிறந்த தலைவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைப்போம்.

அதில் ஒரு சிறப்பு விருந்தினர் தான் வெங்கையா நாயுடு, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று சென்றால் ஒரு மாணவர் பத்தாயிரம் புத்தகத்தை படித்ததைப் போல பயனை பெறுவார். அடுக்கு மொழியில் தமிழிழும் சரி, ஆங்கிலத்திலும் சரி சரளமாக பேசக்கூடியவர். மிகவும் எளிமையானவர், அதிர்ஷ்டத்தால் பதவியை அடைந்தவர் அல்ல, உழைப்பால் பதவியை அடைந்தவர்" என தெரிவித்தார்.

அதன் பின் பேசிய முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, "பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதில் எனக்கு பழக்கம் இல்லை. ஒரு பெரிய புயலுக்கு நான்கு நாட்களுக்கு முன்தினம் பிறந்தவன் நான். என எனது பாட்டி கூறுவார். நண்பர்களுக்காக மட்டுமே இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன்.

எனக்கும் சென்னைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு நெறிமுறை மிகவும் பிடிக்கும். ஆரம்ப காலத்தில் இளவயது மாணவர் தலைவராக எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். 14 ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸில் நான் இணைந்தேன். ஆர்எஸ்எஸில் இணைந்ததால் தான், நான் தலைமைத்துவ பண்பை கற்றுக் கொண்டேன். எனக்கு அரசியல் குருவாக அடல் பிகாரி வாஜ்பாய் விளங்கினார்.

ஆரம்ப காலத்திலேயே அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு மேடையில் நான் குடியரசு தலைவராக வருவேன் என கூறினார். அவர் கூறியது போலவே நடந்தது. எனது தாயின் ஆசை போலவே வழக்கறிஞராக பணியாற்றினேன். அதற்கு பிறகு கட்சியில் இணைந்தேன். கட்சி என்னை வழிநடத்தி இத்தகைய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இந்த இடம் சாதாரணமாக கிடைக்கவில்லை கடின உழைப்பு, விடாமுயற்சி குறிக்கோள், நேர்மை தன்மை தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் குறிக்கோளுடன் நேர்மை தன்மையாக வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும். அப்போதுதான் வெற்றியை பெற முடியும். இந்தியா இப்போது உலகமே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உருமாரிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோடியின் ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரமே உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இப்போது வளர்ச்சி அடைந்த ஐந்தாவது பொருளாதாரம் நாடக இருக்கிறது கூடிய விரைவில் மூன்றாவது பொருளாதர வளர்ச்சியடைந்த நாடாக மாறும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "அரசு அனுமதி அளித்தாலும் எங்கள் வளங்களை சூறையாடிச் செல்ல விடமாட்டோம்" - இலங்கை கடல் தொழிலாளர் சங்கம்! - Srilankan fishermen association

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.