ETV Bharat / state

"அண்ணனுக்காக வெயிட்டிங்..” சோஷியல் மீடியாக்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அலப்பறை! - SENTHIL BALAJI Bail Case - SENTHIL BALAJI BAIL CASE

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என அவரின் ஆதரவாளர்கள் இணையத்தில் அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பது போல ஸ்டேட்டஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஸ்டேட்டஸ்
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஸ்டேட்டஸ் (Credits - senthilbalaji supporters X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 4:03 PM IST

கோயம்புத்தூர்: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குறிப்பாக, கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றாலும், செந்தில் பாலாஜியின் செல்வாக்கு இன்னும் கோயம்புத்தூரில் அதிகமாக உள்ளதாக திமுகவினர் கருதுகின்றனர். செந்தில் பாலாஜியின் ஜாமீன் விவகாரம் தொடர்பாக வரும் செய்திகள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களிடையே கலக்கம் அடையச் செய்துள்ளது.

செந்தில் பாலாஜி ஆதரவாளர் போஸ்ட்
செந்தில் பாலாஜி ஆதரவாளர் போஸ்ட் (Credits - Rock bala X page)

இதனால் அவசர அவசரமாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் செந்தில் பாலாஜியின் படத்தை முகப்புப் படமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பது போல ஸ்டேட்டஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ‘அரசன் அரசன் தான்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். ஒரு சிலர் அவரின் பழைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவை அனைத்தும் செந்தில் பாலாஜியால் அவர்கள் பெற்ற பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு தான் என்கின்றனர் செந்தில் பாலாஜியின் தொண்டர்கள். இது குறித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கூறுகையில், “2022-இல் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கோயம்புத்தூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 73 திமுக மாமன்ற உறுப்பினர்கள், 159 நகராட்சி உறுப்பினர்கள், 378 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 610 பேர் இவரால் பலனடைந்தவர்கள்.

செந்தில் பாலாஜி ஆதரவாளர் போஸ்ட்
செந்தில் பாலாஜி ஆதரவாளர் போஸ்ட் (Credits - dinesh kumar instagram page)

இவர்களை வெற்றி பெற வைக்க காலை கோயம்புத்தூர், மாலையில் கரூர், இரவில் சென்னை என வாகனத்திலே உணவு, தூக்கம் என இருந்தார். தேர்தல் அறிவிப்பு நாள் கூட கோயம்புத்தூரில் தான் இருந்தார். ஆனால், இவர் கைதான நாளில் இருந்து ஆறு முறை நேரடியாக நீதிமன்றத்திற்கும், மூன்று முறை மருத்துவமனைக்கும் வந்த இவரை, ஒரு நாள் செலவழித்து அந்த 610 பேரில் 61 பேர் கூட அவரைச் சென்று சந்திக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே நேரில் சென்று பார்த்தனர்.

முன்னாள் அமைச்சர் நீதிமன்றம், மருத்துவமனை வரும் போது எல்லாம் அவரால் பயன் அடைந்த சுமார் 500 பேராவது கூடியிருந்தால் அவருக்கு நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும். ஒருவேளை இன்று ஜாமீன் கிடைத்தால் சொந்த வேலைகளைவிட்டு 6 ஆயிரத்து 100 வாகனம் கோயம்புத்தூரில் இருந்து சென்னை மற்றும் கரூர் கிளம்ப வேண்டும். இதுவரை இவருக்காக எதையும் செய்யாத இவர்கள், தங்களின் பதவியை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஸ்டேட்டஸ்களை வைக்கின்றனர்.

மேலும் பதவி சுகம் தேடி, அலையும் சிலரின் வஞ்சகத்தில் இனியும் அண்ணன் விழாமல் இருக்க வேண்டும் என்பதே இவரிடம் இருந்து அரசியல் களம் கற்றுக்கொண்ட எளிய தொண்டர்களின் வேண்டுகோள்” எனத் தெரிவித்தனர்.

join ETV Bharat WhatsApp channel click here
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு! - minister periyasamy case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.