ETV Bharat / state

“பார்முலா 4 கார் ரேஸா, இல்ல..?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! - ADMK Jayakumar - ADMK JAYAKUMAR

AIADMK Jayakumar: சென்னையில் நடைபெற்று வரும் பார்முலா 4 கார் பந்தயம் கார் ரேஸா? அல்லது நாய் ரேஸா? என்று தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 6:45 PM IST

சென்னை: பார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், பணிச்சுமை காரணமாகவே காவல் உதவி ஆணையர் உயிரிழந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை பெரம்பூரில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “திமுக முதலாளித்துவ அரசு, கார்ப்பரேட் அரசு. ஏழை, எளிய மாணவர்கள் திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது தான் பார்முலா 4 கார் பந்தயம்.

கார் ரேஸா? நாய் ரேஸா: அரசு ஏற்கனவே பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ரூ.48 கோடி செலவழித்தது. ஆனால், அதனை நிறுவனத்திற்கு திருப்பித் தரவில்லை. இது பார்முலா 4 கார் ரேஸா? அல்லது நாய் ரேஸா என்பது தெரியவில்லை. ஒரு நாய் உள்ளே புகுந்து, ஒரு மணி நேரம் அவர்களுக்கு தண்ணீர் காட்டியுள்ளது. எப்ஐஏ சான்றிதழ் முன்பே வாங்க வேண்டும். இவர்கள் ஏன் முன்பே வாங்கவில்லை?

கார் பந்தயம் மூலம் வசூலிக்கப்படும் பணம் யாருக்கு?: தகுதிச் சுற்றிற்கு மட்டும் ரூ.1,700-லிருந்து 17 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு, 10 ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களது பணம் போச்சு. இது குறித்து விளையாட்டுத் துறை தெளிவுப்படுத்தவில்லை. இந்தப் போட்டிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது. மேலும், கார் பந்தயத்தை இரண்டு தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பு செய்து லாபம் பார்க்கின்றனர்.

முதலமைச்சர் நாடு எப்படி போனால் என்ன? மழை வந்தால் என்ன? வெள்ளம் வந்தால் என்ன? என அமெரிக்கா சென்றுள்ளார். அதேபோல், அண்ணாமலையும் லண்டன் சென்றுள்ளார். அங்கே என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சில தினங்களில் நாம் பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால், அதில் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த துறைகளும் கார் பந்தயத்தில் மட்டும் குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை லண்டனுக்குச் சென்றுள்ளார். தற்பொழுது 5 பேர் வந்துள்ளார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. அகில இந்திய அளவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி பாஜக. நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூவம் என்றாலே கருணாநிதி தான் ஞாபகம் வரும்.

கூவம் மறுசீரமைப்பு எனக்கூறி மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்தார்கள். அதனை எம்ஜிஆர் வெளிக்கொண்டு வந்தார். திவாகரன் போன்றவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அல்லது பிற அரசியல் கட்சித் தலைவர் குறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன்” என்றார்.

பிஎம் ஸ்ரீ குறித்து கடந்த பிப்ரவரி மாதமே தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த துக்ளக் அரசுக்கு அது தெரியவில்லை. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது போல நடிக்கிறார்கள். திமுக அரசு மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் சரக்கு விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "சொன்னதைச் செய்தார் மு.க.ஸ்டாலின்..” செந்தில் பாலாஜி சிறைவாசம் குறித்து எச்.ராஜா பளீச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.