ETV Bharat / state

1.5 டன் சந்தனக் கட்டைகள் கடத்தல்.. ஈரோட்டில் கேரளா கும்பல் கைது! - Sandalwood smuggling

Sandalwood smuggling: ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு சந்தனக் கட்டைகள் கடத்திய கேரளாவைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து 1.5 டன் சந்தனக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள் (Ctredits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 3:19 PM IST

சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு சந்தனக் கட்டைகள் வாகனங்களில் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பெயரில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, மகுடஞ்சாவடி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது சந்தேகப்படும் வகையில் ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு வந்த வேனை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். வேனுக்குள் இருந்த சாக்கு முட்டைகளில் சந்தனக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த முகமது சுகேல் மற்றும் உடன் வந்த முகமது பசீலூர் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், அவர்களை சேலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தனக் கட்டை கடத்தலில் கேரளாவைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. முகமது சுகேல், முகமது பசீலூர் ரகுமான் ஆகியோர் சிக்கியதும், அவர்கள் காரில் தப்பிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த கேரளாவைச் சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பாஜாஸ், உம்மர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்து, சந்தனக் கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர்? இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? யாருக்காக கடத்திச் சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, கைதான ஆறு பேரையும், சேலம் ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மூட்டை மூட்டையாக காரில் 'பாண்டி சாராயம்' - சுற்றிவளைத்த மயிலாடுதுறை போலீஸ்! - Mayiladuthurai Liquor Smuggling

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.