ETV Bharat / state

தாயை பிரிந்த குட்டி யானை! மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம் - Baby elephant in Covai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 11:05 AM IST

Baby Elephant: கோவை மாவட்டம், குப்பேபாளையம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த யானை குட்டியை அதன் தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் கோவை மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Baby Elephant
தாயை பிரிந்த குட்டி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

கோவை: கோவை மாவட்டம், குப்பேபாளையம் பகுதியில் தனியார் பாக்குத்தோப்பில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த யானைக் குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் கோவை மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயைப் பிரிந்து கூட்டத்துடன் சுற்றி வந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையின் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு முழுவதும் யானைக் குட்டி ஒரு யானை கூட்டத்துடன் இருந்த நிலையில், அதனை அடையாளம் கண்ட வனத்துறையினர் அதனைப் பிடித்து அதன் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, மருதமலை வனப்பகுதியில் இதன் தாய் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ் ஆகியோர் வனப்பணியாளர்கள் உதவியுடன் தாய் யானைக்கு தண்ணீர் மற்றும் பழங்களும் அதனுடன் மருந்தும் என வழங்கி பரிவுடன் கவனித்துக் கொண்டனர்.

வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தது. தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவை: உடல்நலம் தேறிய பெண் யானை 4 நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் விடுவிப்பு! - FEMALE ELEPHANT IN COVAI

இதனிடையே, வனத்துறையின் சிகிச்சையின் மூலம் உடல் நலம் தேறிய தாய் யானை கிரேன் மூலம் பத்திரமாக வனப்பகுதிக்குள் அதன் குட்டி யானையின் அருகே விடுவிக்கப்பட்டது. இதனிடையே மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானைக் கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது.

கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, தாயிடம் இருந்து மீண்டும் இந்த யானைக் குட்டி பிரிந்து வந்த நிலையில், அதனை அதன் தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதே வனப்பகுதியின் அருகிலேயே தாய் யானை உள்ளதால் அதனுடன் சேர்க்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: "எல்லாருக்கும் தேங்க்ஸ்..” சிகிச்சை முடிந்து காட்டுக்குள் சென்ற பெண் யானை! - Female Elephant Treatment

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.