- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: சென்னையில் இருந்து சேலம், அயோத்தி, ஜெய்ப்பூர், அகமதாபாத் செல்லும் 4 விமானங்களும், அங்கு இருந்து சென்னைக்குத் திரும்பி வர வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இன்று (மார்ச் 19) ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு தனியார் பயணிகள் விமானம், இன்று காலை 11.20 மணிக்கு புறப்பட்டுச் சென்று விட்டு, சேலத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு, பகல் 1.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.
அதேபோல், மற்றொரு தனியார் பயணிகள் விமான நிறுவனம், காலை 6.20 மணிக்கு, சென்னையில் இருந்து ஜெய்ப்பூர், பகல் 12.50 மணிக்கு சென்னையில் இருந்து அயோத்திக்கும், இரவு 10.20 மணிக்கு சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கும் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல், இந்த 3 விமானங்களும் அயோத்தியில் இருந்து மாலை 6.40 மணிக்கு, ஜெய்ப்பூரில் இருந்து பகல் 11.55 மணிக்கு, அகமதாபாத்தில் இருந்து நாளை (மார்ச் 20) அதிகாலை 3.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.
இந்த 3 புறப்பாடு விமானங்கள், அதேபோல் 3 வருகை விமானங்கள் என 6 விமானங்கள், இன்று (மார்ச்.19) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம், அயோத்தி, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் சேர்த்து மொத்தம் 8 விமானச் சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு இந்த விமான நிறுவனங்கள், நிர்வாக காரணங்களால் இந்த விமானச் சேவைகள், ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
அயோத்தி, ஜெய்ப்பூர், அகமதாபாத் விமானங்கள் ரத்துக்குக் காரணம், போதிய பயணிகள் இல்லாமல், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விமானங்களில், பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள குறைந்த அளவிலான பயணிகள், இந்த விமானங்கள் திடீர் ரத்து காரணமாக, கடும் அவதிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி; முழு பாதுகாப்பு வளையத்தில் சென்னை விமான நிலையம்!