ETV Bharat / state

புதுக்கோட்டை: சிக்கன் ரோல் சாப்பிட்ட 5 பேருக்கு உடல் நலக்குறைவு; ஷவர்மா கடைக்கு சீல்

புதுக்கோட்டையில் பிரபல ஷவர்மா கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கெட்டுப்போன சிக்கன், சீல் வைக்கப்பட்ட கடை
கெட்டுப்போன சிக்கன், சீல் வைக்கப்பட்ட கடை (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதுக்குளம் அருகே ஷவர்மா கடை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இரவு கடையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் இரண்டு மகன்கள் உடன் நேற்று(அக்.13) இரவு இந்த ஷவர்மா கடைக்கு சென்று சிக்கன் ரோல் சாப்பிட்ட நிலையில், இன்று காலை 5 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐந்து பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடையின் உரிமையாளர் யூசுப் என்பவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் ஷவர்மா சாப்பிடவில்லை என்றும் சிக்கன் ரோல் சாப்பிட்டதாகவும் கூறினார்.மேலும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நடத்தப்படும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஷவர்மா கடையை ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, அந்த கடையில் இருந்து கெட்டுப்போன மூன்று கிலோ மசாலா தடவிய கோழிக் கறியையும், 4 கிலோ கோழிக் கறியையும் பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: கால் முறிந்தும் அடங்கல.. வாக்கிங் ஸ்டிக்குடன் பைக் திருட்டு.. கிடைத்த காசில் உல்லாசம்.. தாம்பரம் மக்களே உஷார்!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார், "சிக்கன் ரோல் சாப்பிட்ட ஐந்து நபர்களும் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு இரண்டு வருடமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி ஷவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிப்பவர்கள் அதிக கலர் போடக்கூடாது ரசாயனம் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர துரித உணவுக் கடைகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.