ETV Bharat / state

“நாய்க்கு ஏதும் ஊசி போடனுமா?” - நூதனமாக தம்பி மனைவி கொலை.. 5 பேர் கைதானதன் பின்னணி என்ன? - murder in thoothukudi for property

Thoothukudi Crime news: ஒட்டப்பிடாரம் அருகே குடும்ப சொத்துக்காக தனது தம்பியின் மனைவியை கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் அக்கா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் குடும்ப சொத்துக்காகத் தம்பி மனைவியை ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 4:48 PM IST

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வசித்து வந்தவர், ஜெயபால் மனைவி காளியம்மாள் (38). இதில் ஜெயபால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக விபத்தில் இறந்துவிட்ட நிலையில், காளியம்மாள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி அன்று மாலை சுமார் 4.45 மணியளவில், பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்து தாய் காளியம்மாளை தேடிப் பார்த்த போது, வீட்டின் கதவு பகுதியில் காளியம்மாள் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காளியம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் புதியம்புத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் சண்முகம், தலைமைக் காவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராமச்சந்திரன் (28), இவரது உடன் பிறந்த அக்கா விஜயலட்சுமி (30) என்பவர், தனது தகப்பனார் பார்த்து வந்த இரும்பு கடை வியாபாரத்தை தற்போது கவனித்து வந்துள்ளார்.

மேலும், ராமச்சந்திரன் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கு லட்சுமணன் வீட்டிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராமச்சந்திரன் மட்டும் கோயம்புத்தூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும், அவ்வப்போது புதியம்புத்தூரில் உள்ள காளியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும், ராமச்சந்திரனின் அக்கா விஜயலட்சுமி, தனது உறவினரான கவிதா (44) என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு காளியம்மாள், ராமச்சந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், அப்பாவின் சொத்துக்களில் பாதி காளியம்மாளுக்குச் சென்று விடும், எனவே காளியம்மாளை ஆட்களை வைத்து கொலை செய்யுமாறு கவிதாவிடம் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக கவிதா தனது உறவினரான நயினார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவேக் (24) என்பவரிடம் இது தொடர்பாக பேசியுள்ளார்.

மேலும், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு எதுவும் பண்ணவில்லை எனக் கூறி, ஜெயபாலனை விஜயலட்சுமி அடிக்கடி கலைச்செல்வன் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 29ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூர் வந்த ஜெயபாலன், காளியம்மாளின் வீட்டிற்குச் சென்று, தான் கால்நடை மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, நாய்களுக்கு ஏதும் ஊசி போட வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.

பின்னர், காளியம்மாளிடம் நாயை நன்றாக பிடித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, வெளியே சென்று ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கயிற்றை எடுத்துக்கொண்டு வந்து, காளியம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (30), விளாத்திகுளம் ஓடை தெருவைச் சேர்ந்த கவிதா (44), கீழ விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயபாலன் (24), புதியம்புத்தூர் கீழத்தெருவை சேர்ந்த கலைச்செல்வன்(27), மாமுநைனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவேக் (24) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து செய்துள்ளனர். மேலும் விஜயலட்சுமி, கவிதா ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை கொக்கிரகுளம் சிறையிலும், ஜெயபாலன், விவேக், கலைச்செல்வன் ஆகிய மூவரையும் பேரூரணி சிறையிலும் அடைத்தனர்.

இதையும் படிங்க: வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கை தூத்துக்குடி நினைவு இல்லத்திற்கு மாற்றக்கோரி வழக்கு; தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.